கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 5040 பேர் வீட்டுத்தனிமையில்... 12,997 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்..!

கோவை: கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 5040 பேர், வீட்டுத்தனிமையில் சிகிச்சையில் இருக்கின்றனர். மருத்துவமனைகளில், 12,997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 5040 பேர், வீட்டுத்தனிமையில் சிகிச்சையில் இருக்கின்றனர். மருத்துவமனைகளில், 12,997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘‘கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ மனைகளில் இடம் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. கோவை மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் மொத்தமுள்ள, 826 படுக்கைகளில், 695 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 131 படுக்கைகள் காலியாக உள்ளன. ஆக்சிஜன் படுக்கைகள் மொத்தம் 902 உள்ளன. இவற்றில் 902 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 239 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளில், 226 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 13 காலியாக உள்ளன. அரசின் தற்காலிக சிகிச்சை மையங்களில், 1844 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தொற்று காரணமாக வீட்டுத்தனிமையில், 5040 பேர் இருக்கின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு, அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவ மனைகளில், 541 சாதாரண படுக்கைகள், 26 ஆக்சிஜன் படுக்கைகள், 59 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் காலியாக உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் மொத்தம், 3956 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தனியாரின் தற்காலிக முகாம்களில், 334 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த 9213 பேரும், பிற மாவட்டங்களை சேர்ந்த 3784 பேர் என மொத்தம், 12997 பேர், இங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.'' என்று மாவட்ட கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...