கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா மருத்துவ முகாம்; அறிகுறியுடன் இருந்த 83 பேருக்கு பரிசோதனை

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில், இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் 83 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில், இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் 83 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாளுக்குநாள் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 2500 க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டும், 15 -20 பேர் வரை மரணிக்கும் நிலை மக்களிடையே பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று சிக்கலாம்பாளையம், அரசம்பாளையம், கிணத்துக்கடவு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மருத்துவ பரிசோதனை முகாம் சுகாதாரதுறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 83 பேருக்கு கொரோனா பரிசோதனை ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.



மேலும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள், முடிவுகள் வெளிவரும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும்

தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...