வால்பாறையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்..!

கோவை: வால்பாறையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டுக்கழகத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கொரானா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழக லாசன் டிவிசனில் 6 மற்றும் 7 பிரிவில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா சளி பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆதார் எண்ணோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு அவர்களுடைய உடல் வெப்பநிலை சோதனையுடன் காய்ச்சல் பரிசோதிக்கப்பட்டது.

இந்த முகாமில் வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், தேயிலைத் தோட்ட கழக மருத்துவர், செவிலியர், அலுவலர்கள் மற்றும் 245 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...