இந்தியா முழுவதும் இதுவரை 16.73 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று தடுப்பூசி!

புதுடெல்லி: இந்தியா முழுவதும் இதுவரை 16.73 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


புதுடெல்லி: இந்தியா முழுவதும் இதுவரை 16.73 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெருந்தொற்று இரண்டாவது அலையில் கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச சமூகம் அளித்து வரும் உதவிகள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முறையாக ஒதுக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2933 பிராணவாயு செறிவூட்டிகள், 2429 பிராண வாயு சிலிண்டர்கள், 13 பிராண வாயு உற்பத்தி கருவிகள், 2951 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 16.73 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் (10,703) உள்ளிட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18-44 வயதில் 14,88,528 பயனாளிகளுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 24,37,299 முகாம்களில் 16,73,46,544 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 23 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.தடுப்பூசித் திட்டத்தின் 112-வது நாளன்று (மே 7, 2021) 22,97,257 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 18,692 முகாம்களில் 9,87,909 பயனாளிகளுக்கு முதல் டோஸும், 13,09,348 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டன.

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,79,30,960 ஆக இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,18,609 பேர் குணமடைந்தனர். இவர்களில் 71.93 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நம் நாட்டில் இதுவரை 30 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 4,01,078 புதிய பாதிப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது. இதில் 70.77 சதவீத நோய் தொற்று பாதிப்பு, 10 மாநிலங்களில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54,022 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 48,781 பேரும், கேரளாவில் 38,460 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,23,446 ஆக அதிகரித்துள்ளது. இதில் 80.68 சதவீதம், 12 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. தேசிய உயிரிழப்பு வீதம், 1.09 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,187 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 77.29 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். டாமன் டையூ மற்றும் தாதர் நாகர் ஹவேலி, மிசோரம், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...