கோவையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மேலும் 3 ஆயிரம் சுகாதார பணியாளர்களின் விவரங்கள் பதிவு!

கோவை: கோவையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மேலும் 3 ஆயிரம் சுகாதார பணியாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மேலும் 3 ஆயிரம் சுகாதார பணியாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்வரை சுமார் 32 ஆயிரம் பேர்களின் விவரங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், தற்போது மேலும் 3 ஆயிரம் சுகாதார பணியாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொரோனா தடுப்பூசி வந்தால் பதப்படுத்தி பாதுகாக்க கோவையில் குளிர்பதன அறைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கான குளிர்பதன பெட்டிகளும் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இங்கிருந்து நீலகிரி, திருப்பூர், ஈரோட்டுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும், முதல்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சுகாதார பணியாளர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாதகாலமாக சேகரிக்கப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் வரை 32 ஆயிரம் பேர்களின் விவரங்கள் பதிவாகி இருந்தன.

தற்போது மேலும் 3 ஆயிரம் பேர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி வந்ததும் வரிசைப்படி அனைவருக்கும் செலுத்தப்படும். மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், வருவாய் துறையினர், போலீசார், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...