கொரோனா தடுப்பூசி பலப்படுத்த 64 குளிர்பதனப் பெட்டிகள்: கோவை வந்தன!

கோவை: கொரோனா தடுப்பூசியை பலப்படுத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 64 குளிர்பதனப் பெட்டிகள் கோவை வந்தடைந்தன.


கோவை: கொரோனா தடுப்பூசியை பலப்படுத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 64 குளிர்பதனப் பெட்டிகள் கோவை வந்தடைந்தன.

கொரோனா வைரஸ் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டால் அவற்றைப் பதப்படுத்தி வைக்க கோவையில் நேற்று 64 குளிர்பதனப் பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் மருந்துகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்க முடியும். மேலும் இந்த 64 பெட்டிகளில் கோவைக்கு 24, ஈரோடு 15, திருப்பூர் 16, நீலகிரி 9 என பிரித்து வைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...