கொரோனா வைரஸ்: காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை

கோவை: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்புகள் பரவி வருவதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நோய் பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கோவை: à®‡à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯à®®à¯ கொரோனா வைரஸ் நோய் பாதிப்புகள் பரவி வருவதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நோய் பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும், பள்ளிகல்வித்துறை செயலர்களுக்கும் மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. 

இந்த ஆலோசனையின் பேரில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:- 

மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது கைக்குட்டையை பயன்படுத்த அறிவுறுத்துவதுடன் அவர்கள் தங்கள் கைகளை நன்கு கழுவி தூய்மையாக வைத்துக் கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

அதேபோல காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் ஏற்படும் பொழுது பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...