நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...!

நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.


நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற  தாதுக்கள் நிறைந்துள்ளன. 

நாவல் மரத்தின் பழம், இலை,  மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.

 

நாவல் பழம் மற்றும் அதன் விதைகளானது ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதைக் கட்டுப்படுத்தும். மேலும் யுனானி மருத்து முறையில் நீரிழிவிற்கு இந்த பழத்தின் விதையைத் தான் முதன்மையாக பயன்படுத்துகின்றனர். எனவே இதன் விதையை பொடி செய்து, அதனை நீரில்  கலந்து குடிக்கலாம். இல்லாவிட்டால், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வரலாம்.

 

நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

 

மலச்சிக்கல் பிரச்சனையா? அப்படியானால் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமான நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு  முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள்.

 

ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும்  இருக்கும்.

 

வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால்,  உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிடுவது நல்லது.

 

நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதற்கு அவற்றை நீரில் போட்டு  கொதிக்க விட்டு, அந்நீரை பருக வேண்டும்.

 

சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.

 

நோய் நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், அவை சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். எப்படியெனில் நாவல் பழங்களானது மெலனினை செல்களாக செய்யத் தூண்டுகிறது.

 

பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

 

குறிப்பு:

 

நாவல் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து வர வேண்டாம். நாவல் பழங்களை சாப்பிட்ட உடனே பால் குடிக்க வேண்டாம். முக்கியமாக நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...