இருமல் சளியை விரட்டும் இஞ்சி!

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும்.

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும். 

குளிர்காலத்தில் காற்றில் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் அதிகம் இருக்கும். இந்த காற்றை சுவாசிப்பதால் சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். குளிர்காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டிலேயே சில கசாயங்களை வைத்து பருகலாம். அதில் முக்கியமானது இஞ்சி டீ. இந்த இஞ்சி டீயை பருகுவதால் அஜீரணம், குமட்டல், வாந்தி, வயறு உப்புசம், சோர்வு, உடல் வலி ஆகியவை குணமாகும். மேலும் சளி தொந்தரவு இல்லாமல் பார்த்து கொள்ளும்.

இஞ்சியின் நன்மைகள்

இஞ்சியில் ஆண்டி இன்ஃப்ளமேட்ரி தன்மை நிறைந்துள்ளது. இதனால் தலைவலி, காய்ச்சல், மாதவிடாய் வலி ஆகியவை குணமாகும். மேலும் ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் நோய் உள்ளவர்களுக்கு இஞ்சி சாறு மிகவும் நல்லது. தினமும் காலையில் இஞ்சி டீ குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் குணமாகும். இஞ்சியில் ஜிஞ்சரால் என்னும் பொருள் இருப்பதால் இது உடலை உள்ளிருந்து வலிமையாக்கி நோய்களில் இருந்து உடனடியாக விடுவிக்கும்.

இஞ்சி டீ எப்படி தயாரிப்பது?

இஞ்சி ஒரு துண்டு, பட்டை ஒரு துண்டு, லெமன் க்ராஸ் இரண்டு பங்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து வடிக்கட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.

இஞ்சி இரண்டு பங்கு, பட்டை மூன்று பங்கு, ஏலக்காய் ஒரு சிட்டிகை சேர்த்து அதில் தேன் ஊற்றி பருகி வரலாம். இவை உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...