திராட்சையில் உள்ள சத்துக்கள் இத்தனை பயன்களை கொண்டதா....!!

திராட்சையில் உள்ள சத்துக்கள் இத்தனை பயன்களை கொண்டதா....!!

திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கருப்பு, சிவப்பு, மற்றும் பச்சை நிறம் என நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகளுமே உள்ளன. மூன்று வகை திராட்சைகளுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை.

கருப்பு திராட்சை யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரககங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து, சிறுநீரகங்களின்  ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 

தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக  இருக்கும்.

 

கருப்பு திராட்சையை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கருப்பு திராட்சை வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து, உண்ணும் உணவுகள் எளிதில்  செரிமானமாக உதவும்

 

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். சரும செல்களை  ஆரோக்கியமாக பாதுகாத்து, முதுமைத் தோற்றம், வறட்சியான சருமம், வறண்டுபோன சருமம், இவற்றை மென்மையாக்க உதவுகிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...