மாதுளை பழத்தின் மருத்துவ குணங்கள் – 10 விதமான பயன்கள்

மாதுளம் பழத்தின் ஒவ்வொரும் பகுதியும் எண்ணற்ற நன்மைகளை நமக்குத் தருகின்றன.

மாதுளம் பழத்தின் ஒவ்வொரும் பகுதியும் எண்ணற்ற நன்மைகளை நமக்குத் தருகின்றன. அவை சரும அழகைக் கூட்டக்கூடிய பழமாகவும், கூந்தல் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் பழமாகவுக் இந்த மாதுளைப் பழம் விளங்குகிறது. இந்த 35 விதமான மருத்துவ குணங்களையும் பயன்களையும் கீழே காணலாம்.




மாதுளையின் உடல் ஆரோக்கியத்திற்கானப் பயன்கள்:

1) பல் பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வு:




குறிப்பிட்ட பல் நிலைமைகளின் சிகிச்சையில் மாதுளை சிறந்த பயனளிக்கிறது. மாதுளைப் பழச்சாற்றில் உள்ள அதிக அளவு பாலிபினோல் மற்றும் பிளவனாய்டுகள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய கலவையாக இருப்பதால் வாய் துர்நாற்றத்தினை நீக்குகிறது. மேலும் சிறந்த வாய் கழுவியாகப் (Mouthwash) பயன்படுகிறது. மாதுளைப் பழச்சாற்றினைத் தொடர்ந்து குடித்து வருவதனால் பல் தகடு (Dental Plaque) உருவாகுவது தடுக்கப்படுகிறது. மேலும் மாதுளைச் சாறு பாக்டீரியாவினால் பற்களில் ஏற்படும் துவாரங்கள் மற்றும் ஈறு அழற்சியினை குணப்படுத்த உதவுகிறது. எனவே மாதுளையையும், மாதுளைச் சாற்றினையும் தினமும் பருகி, வாய் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

ஊட்டச்சத்து இயக்கங்களின் முன்னனியில் மாதுளை ஒரு “அதிசயப்பழம்” என்று அழைக்கப்படுகிறது. இப்பழமானது ஆரோக்கியமான மற்றும் உகந்த வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்களை உள்ளடக்கியது. மாதுளையின் மூலம் ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் பலன்கள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

2) நல்ல செரிமானம்:

செரிமானத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்சைம்களை உற்பத்தி செய்வதில் மாதுளை முக்கியப் பங்கினைக் கொண்டுள்ளது. மாதுளைப் பழச்ச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், தலைசுற்று களைப்பு மற்றும் சோரிவினைக் குணப்படுத்துகிறது. மேலும் இப்பழம் அதிகப்படியான அமிலத்தன்மைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்பழத்தில் காரத்தன்மை நிறைந்துள்ளதால், அமிலத்தன்மையை சீராக்க உதவுகிறது. மாதுளைப் பழம் அல்லது மதுளம் பழச்சாற்றினை ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் ஒரு மாதத்திற்குச் சாப்பிட்டு வந்தால் நேர்மறையான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

3) மூலம் நோய்க்கு இயற்கை மருந்து மாதுளம் பழம்:

மூல வியாதிக்கான சிகிச்சையில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிச்சயமாகத் தினமும் காலையில் மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்குத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பழச்சாற்றில் உப்பிற்குப் பதிலாகத் தேனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்ளுவதன் வழியாக மூல நோயின் தீவிரம் குறையலாம். உலர்ந்த மாதுளைப் பட்டையின் தூளினை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு அதனுடன் மோர் கலந்து தடவுவதன் வழையாக மூல நோயினால் இரத்தப்போக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே மூல நோயின் தீவிரத்தைக் குறைக்க மாதுளைப் பழத்தினை நாடுவதே நலம் பயக்கும்.

4) உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் மிகுதியாக உள்ள மாதுளை பழம்:

மாதுளைப் பழத்தின் நன்மைகளில் ஒன்று இந்தப் பழத்தில் உள்ள நம்பமுடியாத அளவில் காணப்படும் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் (Antioxidants) தான். மாதுளைப் பழமானது பச்சைத் தேநீர் அல்லது பசும் தேநீர் (Green tea) மற்றும் சிவப்புத் திராட்சை மதுவை (Red Wine) விட மூன்று மடங்கு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளைக் கொண்டுள்ளது. இவற்றில் மூன்று வகையான பாலிபினால்களைக் கொண்டுள்ளது. அவை நோயெதிர்ப்பு மண்டல அமைப்புக்கு ஆதரவளிக்கக் கூடியதும் மேலும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கக் கூடியதுமான அந்தொசியனின் (Anthocyanin), எல்லாஜிக் அமிலம் (Ellagic acid), மற்றும் டானின் (Tannin) போன்றவையாகும். அதிக அளவு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் பாலிபினால்கள் உடலில் நோய்கள் ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் கூறுகளைக் குறைக்கப் பயன்படுகிறது. எனவே மாதுளைப் பழத்தின் மூலம் எண்ணற்ற உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள்கள் மற்றும் பாலிபினால்கள் நம் உடலுக்கு நேரடியாகக் கிடைக்கின்றன.

5) நார்ச்சத்து அதிகம்:

மாதுளையான கரையத் தக்க மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுக்கு மிகப்பெரிய நிறைவான ஆதாரமாக உள்ளது. இவை மென்மையான செரிமானத்திற்கும் குடல் இயக்கங்களை எளிமையாக்குவதற்கும் உதவுகிறது. 100 கிராம் மாதுளை பழம் 4 கிராம் நார்ச்சத்தினை வழங்குகிறது. இப்பழத்தில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் காரணமாக எடை குறைப்புத் திட்டங்களில் ஊட்டச்சத்து நிபுணர்களால் இப்பழம் பரிந்துரைக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் உடலைப் போதுமான அளவில் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆரோக்கியமான நன்மைகளை அனுபவிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு குவளை மாதுளைப் பழச்சாறு அல்லது நடுத்தர அளவிலான மாதுளைப் பழத்தைச் சாப்பிட்டு வர வேண்டும்.

மாதுளை பழம் மற்றும் சாறு

6) மார்பகப் புற்றுநோய்க்குத் தீர்வு:

மாதுளைப் பழத்தில் உயிர்வளி ஏற்ற எதிர்ப்பொருளான எல்லாஜிட்டனின் (Ellagitannin) உள்ளது. இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான ஈஸ்ட்ரோஜனைத் தடுக்கிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் உருவாகுவதற்குப் பயன்படும் அரோமடேசைத் (Aromatase) தடுக்கிறது. இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபயாத்தைக் குறைக்கிறது.

7) கர்ப்பத்தில் உதவி:

மாதுளை பழமானது பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ‘சி’, ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்துப் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. எனவே இப்பழம் கருவுற்றப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், உயிரணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாதுளைப்பழம் பயன்படுகிறது. கர்ப்பகாலத்தின்போது பருகப்படும் மாதுளைச் சாறு தசைப்பிடிப்புகள் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கப் பயன்படுகிறது. மேலும் மாதுளைப் பழமானது குழந்தையின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் மூளை சேதத்தின் அபாயத்தைக் குறைப்பதாக அறியப்படுகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் மாதுளை பழத்தை உண்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

8) இரத்த சோகையிலிருந்து விடுதலை:

மாதுளைப் பழங்களில் உள்ள அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையினைக் குணப்படுத்துகிறது. வழக்கமான முறையில் மாதுளைப் பழங்களை உண்பது இரத்தக் குழாய்களில் இரத்த உறைக் கட்டிகள் உருவாகுவதைத் தடைசெய்கிறது. எனவே மாதுளைப் பழங்களை உண்டு இரத்தசோகையிலிருந்து விடுபடலாம்.

9) செரிமான மண்டலம்:

மாதுளை பழச்சாற்றில் செரிமானத்திற்கு உதவக்கூடிய, நுண்ணுயிர்ப் பண்புகள் கொண்ட என்சைம்கள் உள்ளன. மேலும் இப்பழம் மூலநோய், குமட்டல், வயிற்றுப் போக்கு மற்றும் குடல் புழுக்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறாது. மாதுளைப் பழச்சாற்றினை அருந்துவதன் மூலம் மலச்சிக்கலைக் குணப்படுத்தலாம். மாதுளைப் பழத்தை உண்பதனால் செரிமான மண்டலம் வழுவடைகிறது.

10) புரோஸ்டேட் புற்றுநோய்:

மாதுளைப் பழஙக்ள் குறிப்பிட்ட புரோஸ்டேட் ஆன்டிஜென்களைக் குறைப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. மாதுளைப் பழச்சாறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது. மாதுளைச் சாற்றில் உள்ள உயர் பைட்டோகெமிக்கல் (Phytochemical) ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...