இந்த 7 உணவையும் அடிக்கடி சாப்பிட்டீங்கன்னா சீக்கிரமா முடக்குவாதம் வந்துடும்...

யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த, சிறப்பு உணவு கட்டுபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த, சிறப்பு உணவு கட்டுபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்கள் உடலின் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்காமல் உடல் நலத்தை நல்ல முறையில் பாதுக்கக்க எந்த உணவை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால் முடக்கு வாதம் மற்றும் கீல்வாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த அமிலம் உங்கள் மூட்டுப் பகுதியில் உள்ள திரவத்தோடு கலக்கும்போது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் உண்டாகிறது. இதனால் உங்கள் கால் விரல்கள் மற்றும் முட்டிகள் பாதிக்கின்றன.

சில வகை உணவுகளில் ப்யுரின் அதிகமாக உள்ளது. இதனால் இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. இதனை தடுக்க தொடர்ந்து இரத்த பரிசோதனை செய்து கொள்வதும், சீரான உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பது சிறந்த வழிகளாகும்.



மட்டி மீன் : à®‰à®™à¯à®•ள் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால் மட்டி மீனை மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். மேலும், நண்டு, இறால், சிப்பிகள், சிப்பியினம் போன்றவற்றில் ப்யுரின் அதிகமாக உள்ளது. இந்த வகை உணவுகளை நேரடியாகவும் அல்லது பதப்படுத்தப்பட்டு, கேன் வடிவில் இருந்தாலும் இரத்தத்தில் யூரிக் அளவை அதிகப்படுத்தும் தன்மை இந்த வகை உணவிற்கு உண்டு. ஆகவே இவற்றை மிதமான அளவில் உட்கொள்ளவும்.

சிவப்பு இறைச்சி : யூரிக் அமில அளவை அதிகரிப்பதில் பெரும் பங்கு இந்த சிவப்பு இறைச்சிக்கு உண்டு. இந்த உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பன்றி இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி ஆகிய இரண்டிலும் அதிக அளவு ப்யுரின் உள்ளது. கொழுப்பு இறைச்சி, துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி, சிறுநீரகம், மற்றும் தேக உறுப்புகள் இறைச்சி போன்றவற்றிலும் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் தன்மைகள் உண்டு.

பயறு வகைகள் : பருப்பு, கொண்டைக்கடலை, பீன்ஸ் போன்றவற்றில் ப்யுரின் அளவு அதிகமாக உள்ளது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இதனை பயன்படுத்துவதால் உங்கள் உடலின் யூரிக் அமில அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

சில வகை காய்கறிகள் : யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பவர்கள் அஸ்பரகஸ், காளான், காலிப்ளவர், கீரை, முள்ளங்கி போன்றவற்ற காய்கறி வகைகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

அல்கஹால் : சிவப்பு இறைச்சி, மட்டி மீன் போன்றவற்றை விட அதிக தீங்கை மக்களுக்கு ஏற்படுத்துவது பீர் . மது , உடலில் யூரிக் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலை விட்டு இந்த அமிலம் வெளியேற முடியாமல் தடுக்கிறது. கீல்வாதம் போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் பீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை சேர்த்த பானங்கள் மற்றும் இனிப்புகள் : குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழச் சாறுகளில் சேர்க்கப்படும் கார்ன் சிரப் , யூரிக் அமில உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும் குக்கி, கேக், மாவுப்பன்டங்கள், போன்றவற்றில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுவதால் இதனை எடுத்துக் கொள்வதால் இன்னும் நிலைமை மோசமாகிறது.

காபி : யூரிக் அமில அளவு அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறைக்கும் மேல் காபி குடிக்காமல் இருப்பது நல்லது.

அறிகுறிகள் : உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும்போது முடக்குவாதம் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாகிறது. இதற்கான பொதுவான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

- கால் பெருவிரலில் அதிக வலி 

- மூட்டு பகுதிகளில் அதிக வலி மற்றும் வீக்கம் 

- சிறுநீர் கழிப்பதில் சிரமம் 

- அதிகரித்த இதயத்துடிப்பு 

- கால் முட்டியில் வலி 

- சிறுநீரக கற்கள் 

- சோர்வு 

- மூட்டு பகுதியை சுற்றி பெரிய கட்டிகள் 

பரிசோதனை மூலம் மருத்துவர்கள் சரியான பிரச்னையை கண்டறிந்து உங்களுக்கான சிகிச்சையை மேற்கொள்வார். உணவுக் கட்டுப்பாட்டையும் அவர் தீர்மானிப்பார்.

சிகிச்சைகள் : மூட்டுகளில் தாங்க முடியாத அளவு வலி ஏற்படலாம். ஆனால் குளிர் அழுத்தங்கள் மூலம் அல்லது மற்ற சிகிச்சைகள் மூலம் ஓரளவு நிவாரணம் பெறலாம். மருத்துவர் , ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம். குறைந்த டோஸ் மாத்திரைகளை முதலில் கொடுத்து படிப்படியாக மருந்தின் அளவை அதிகரிக்கலாம். சிகிச்சைக்கான காலகட்டம் ஆறு மாதம் முதல் பன்னிரண்டு மாதம் வரை நீடிக்கலாம். இந்த காலகட்டத்தில் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம், மேலும் சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

எளிய டயட் 

யூரிக் அமில அளவைக் குறைக்க ஒரு உதாரண டயட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவுக் கட்டுபாட்டு முறையில் புரத சத்தை அதிகரிக்க பால் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு முயல் இறைச்சி விருப்பம் என்றால் அதனையும் சேர்த்துக் கொள்ளலாம். இதில் ப்யுரின் அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக உள்ளது. 

காலை உணவு : 

1 கப் ஸ்கிம் பால் 

2 துண்டு முழு தானிய பிரட் 




நண்பகல் சிற்றுண்டி : 

1 வாழைப்பழம் 

மதிய உணவு : 

தக்காளி சாஸ் உடன் க்னோகி (Gnocchi) 

க்ரில் வெள்ளை மீன் 

ப்ளான் ( Flan) 

மதிய சிற்றுண்டி : 

1 துண்டு தர்பூசணி 

இரவு உணவு : 

கத்திரிக்காய் பர்மிசன் 

தக்காளி, துளசி மற்றும் கேரட் சேர்த்த சாலட் 

புரதங்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை தேர்ந்தெடுத்து உண்ணலாம். குறைந்த கொழுப்பு உணவுகளை தேர்வு செய்து உண்ணலாம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...