காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?... உங்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ்

காலை எழுந்தவுடன் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?... 3 மாதத்தில் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று தெரியுமா? அத மொதல்ல தெரிஞ்சிக்கோங்க...

காலை எழுந்தவுடன் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?... 3 மாதத்தில் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று தெரியுமா? அத மொதல்ல தெரிஞ்சிக்கோங்க...

வெறுமனே உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். உடல் எடையைக் குறைக்கும் என்பதையும் தாண்டி, தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதால், உங்களால் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு நன்மைகள் நடக்கும். அவை என்னவென்று பார்ப்போமா?

வெந்நீர் குடித்தல் 

ஐஸ் வாட்டரை பார்த்தால் பாய்ந்து ஓடி குடிக்கும் நாம், காய்ச்சல் வந்தால் கூட சுடு தண்ணீர் குடிப்பதற்கு முகம் சுளிப்போம். ஆனால் சிலர், குறிப்பாக, ஏதேனும் டயட்டை பின்பற்றுபவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகளின் பேரில், உடல் எடையை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று, மருந்தாக நினைத்து வேறு வழியில்லாமல் வெந்நீரை தொடர்ந்து குடித்து வருவார்கள். அவர்கள் செய்யும் அந்த நல்ல விஷயத்துக்காக வருத்தப்பட வேண்டாம். அவர்கள் அப்படி குடிப்பதன் மூலம் உடல் எடை மட்டுமல்ல, நிறைய அபாயகரமான நோயிலிருந்தும் விடுவடுவார்கள்.

ஆராய்ச்சி 

வெந்நீர் குடிப்பது சரியா?... குளிர்ந்த நீர் பருகுவதால் என்ன மாதிரியான அபாயங்கள் உண்டாகும்?...இல்லை. சாதாரண ரூம் டெம்ப்ரேச்சரில் உள்ள தண்ணீர் குடிப்பதே போதுமானதா என்ற ஆராய்ச்சியில் ஜப்பானிய மருத்துவக் குழு ஒன்று ஈடுபட்டது. அந்த ஆய்வின் முடிவில், வெந்நீர் குடிப்பதால் பல பிரச்னைகள் தீர்க்கப்படுவதை உறுதி செய்துள்ளனர். அப்படி வெந்நீர் குடித்தால் என்னென்ன பிரச்னைகள் தீரும் என்று பார்க்கலாம்.

தீரும் நோய்கள் 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதால், கீழ்வரும் பிரச்னைகள் குணமாகும் என கண்டறியப்பட்டுள்ளது. அவை, 

- ஒற்றைத் தலைவலி 

- உயர் ரத்த அழுத்தம் 

- குறைந்த ரத்த அழுத்தம் 

- மூட்டுவலி 

- இதய துடிப்பு திடீரென கூடுவது, குறைவது 

- கால்- கை வலிப்பு 

- கொழுப்பு அளவு அதிகரித்தல் 

- இருமல் 

- உடல்வலி 

- ஆஸ்துமா 

- நரம்பு தடிப்பு நோய்கள் 

- வயிற்றுக்கோளாறுகள் 

- பசியின்மை 

- கண், காது, தொண்டை தொடர்பான பிரச்னைகள் 

- தலைவலி ...ஆகியவற்றை குணப்படுத்தும்.

எப்படி குடிக்க வேண்டும்? 

தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் 2 டம்ளர் அளவுக்கு சூடான நீரைப் பருக வேண்டும். ஆரம்ப நாட்களில் வெறும் வயிற்றில் 2 டம்ளர் சூடான நீர் பருகுவது கொஞ்சம் நிரமமாகத் தான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துப் பழகிக் கொள்ளுங்கள்.

45 இடைவெளி 

காலையில் சூடான நீரைக் குடித்தபின், அடுத்த 45 நிமிடங்கள் வரை வேறு எந்த உணவையும், காபி, டீ கூட எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த 45 நிமிட இடைவெளி மிக அவசியம். அந்த இடைவெளி அவசியம் என்பதால் தான், எழுந்தவுடன் குடிக்கச் சொல்கிறார்கள்.

குளிர்ந்த நீர் 

ஐஸ் வாட்டரை ரசித்துக் குடிப்பவரா நீங்கள்?... இளம் வயதில் வேண்டுமானால் அதனால் பெரிய பாதிப்புகள் உங்களுக்கு ஏற்படாமல் போகலாம். ஆனால் வயது முதிர்ச்சி ஏற்படும் போது நிச்சயம் அது உங்களை பாதிக்கும்.அதனால் கூடுமானவரை ஐஸ் வாட்டரை தவிர்த்திடுங்கள். காலையில் ஓகே. ஆனால் வெயில் நேரத்தில் எப்படி சூடான நீரை குடிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அந்த சமயங்களில் சாதாரண ரூம் டெம்பரேச்சரில் உள்ள தண்ணீரைப் பருகுங்கள்.

இதய பிரச்னைகள் 

குளிர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் உண்டாகின்றன. இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இதயம் தொடர்பான பாதிப்புகளுக்கு நிச்சயம் குளிர்ந்த நீர் காரணமாக இருக்கும்.




கல்லீரல் 

குளிர்ந்த நீரை அதிகமாகக் குடிப்பதால், கல்லீரல் பிரச்னைகளை உருவாக்குகிறது. உடலில் உள்ள கொழுப்புகள் கல்லீரலில் சென்று தேங்கும் நிலையும் இருக்கிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்பவர்களை பல பேரை நீங்கள் விசாரித்தால் தெரியும். அவர்களுக்கு சுடு தண்ணீர் குடிக்கும் பழக்கமே இருக்காது.

புற்றுநோய் 

குளிர்ந்த நீரை அதிகமாகக் குடிப்பதால், வயிற்றின் உள் சுற்றுச்சுவர்கள் பாதிப்படைகின்றன. அது பெருங்குடல் பகுதியை பாதித்து குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...