அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள்: மருத்துவத்துறையால் வேதனைக்குள்ளாகும் பொதுமக்கள்

மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவத்துறையில், பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும் ஒரு சில தனியார் மருத்துவமனைகளால் குழந்தையைப் பிரிந்து துயரத்தால் வாடும் தாயின் வேதனை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவத்துறையில், பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும் ஒரு சில தனியார் மருத்துவமனைகளால் குழந்தையைப் பிரிந்து துயரத்தால் வாடும் தாயின் வேதனை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

மனிதன் வாழ்வதற்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளில் தற்போது மருத்துவமும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நீட் தேர்வு போன்றவற்றால் மருத்துவப் படிப்பானது மிகவும் விலைமதிக்க முடியாததாக மாறி வரும் நிலையில், மருத்துவ சிகிச்சைகள் குறித்து அறியாத மக்களை (நோயாளிகளை), சில மருத்துவமனைகள் வியாபாரமாகவே பார்க்கின்றனர். அந்த வகையிலான ஒரு சம்பவம் தான் நமது கோவையில் அரங்கேறியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு சுந்தராபுரத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கிருபா நிவாஸ்காமராஜ் என்பவர் தனது கருத்தரிப்பு குறித்த பரிசோதனையை அங்குள்ள 'ஸ்ரீ ரேஷ்மிகா மருத்துவமனையில் மேற்கொண்டு வந்தார். சுமார் 4 அல்லது 5 மாதங்கள் கருவுற்ற நிலையில், மருத்துவமனையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவே கருதி சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், தனது கணவரது நண்பனின் மனைவியும் அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில், அவரது அறிவுறுத்தலின் பேரில் கிருபா, ஸ்ரீ ரேஷ்மிகா மருத்துவமனையின் மருத்துவர்களிடம் அனாமலி ஸ்கேன் (4 அல்லது 5 மாதங்களில் எடுக்கப்படும் ஸ்கேன்) எடுத்து பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆனால், மருத்துவர்கள் அந்த ஸ்கேன் தேவையில்லை எனக் கூறிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, 7 மாதம் கரு உருவான பிறகு கிருபாவிற்கு மயக்கம், வாந்தி உள்ளிட்ட தொந்தரவுகளால் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது, தான் சிகிச்சைப் பெற்று வந்த ஸ்ரீ ரேஷ்மிகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, கர்ப்பப்பையில் நீரின் அளவு குறைவாக இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் அட்மிட் ஆகுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், மேற்கொண்டு ஏதும் அவர்கள் கூறாததால், சாய்பாபா காலனியில் உள்ள வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு அவருக்கு குளுகோஸ் செலுத்தி, அனாமலி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அப்போது, கருவில் உள்ள குழந்தை இருதய குறைபாட்டுடன் இருப்பது தெரியவந்தது. இந்தக் குழந்தை உயிருடன் பிறப்பது என்பதே கடினம் என்பதைக் கேட்ட கிருபா மற்றும் அவரது கணவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவ சிகிச்சைக் குறித்து படித்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து நன்கு அறிந்த மருத்துவர்கள், உரிய நேரத்தில் ஸ்கேன் செய்து பார்க்காமல், வெறும் மருந்துகளையும், மாத்திரைகளையுமே வழங்கி வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் எடுக்க வேண்டிய அனாமலி ஸ்கேனை எடுத்திருந்தால், கருவில் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்து, அப்போதே கருகலைப்பு செய்திருக்க முடியும். ஆனால், மருத்துவமனையின் அலட்சியத்தால், 7 மாதமாக குறைபாடுடன் இருந்த கருவை சுமந்த வேதனையையும், உயிர் பிழைக்காது என்ற மருத்துவர்களின் தற்போதைய குரலையும் கேட்க முடியாமல் அந்த தம்பதியரின் உள்ளங்கள் நொந்து விழுந்தன.

7 மாதங்கள் கடந்ததால், கருக்கலைப்பு செய்ய முடியாது. குழந்தை குறைபாட்டுடன் இருப்பதையறிந்த வேதனையுடன் காலத்தை கழித்த கிருபாவிற்கு, பிரசவ தேதி நெருங்கியது. 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி உடல் ஆரோக்கியத்துடன் கூடிய குழந்தையைப் போலவே, கிருபாவிற்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு அளவில்லா மகிழ்ச்சியை அடைய வேண்டிய சூழலில், இந்த மகிழ்ச்சி நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்பதை நினைத்து அழுதுப் புலம்புவதா.. என தெரியாமல் அவர்களது நெஞ்சம் குமுறியது. இதைத்தொடர்ந்து, குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவர்களும் அலட்சியமாக சிகிச்சையளித்தது அவர்களை மேலும் மனமுடையச் செய்தது.

இந்த நிலையில், 40 நாட்கள் கழித்து டிசம்பர் 14-ம் தேதி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவர்கள், உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய சிகிச்சைகள், பரிசோதனைகளை திறம்படக் கூறாததே, தற்போது, குழந்தையைப் பிரிந்து உருகும் தாயின் நிலை உருவாகியுள்ளது.

"சரியான நேரத்தில் அனாமலி ஸ்கேன் செய்திருந்தால், கருவின் ஆரம்ப நிலையிலேயே, கலைத்து இருக்கலாம், இப்படி, 10 மாதங்கள் சுமந்த பிறகு குழந்தையை பலிகொடுத்திருக்கத் தேவையில்லை. எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எனது குழந்தை பிறக்கும் வரையில் ஏதேனும் மாற்றம் நிகழும் என நம்பிக்கை வைத்திருந்தேன்," என பாதிக்கப்பட்ட கிருபா கண்ணீர்மல்க கூறினார்.

தான் சந்தித்த இதுபோன்ற துயரமிக்க வேதனையை யாரும் உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக கிருபாவும், அவரது கணவரும், சரியான சிகிச்சை அளிக்காத ஸ்ரீ ரேஷ்மிகா மருத்துவமனை மீது மாவட்ட நுகர்வோர் பிரச்சினைகள் குறை தீர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கிருபாவின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதனை வழங்காத மருத்துவமனை, குற்றச்சாட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இது தொடர்பாக கிருபாவின் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "ஒரு சிறிய நோயை சரியான நேரத்தில் கண்டறிந்திருந்ததால், பிரசவ வலியையும் மீறிய ஒரு வலியை அந்தத் தாய் உணர்ந்திருக்க மாட்டார். மேலும், இந்த குழந்தையின் மரணம், தாயிற்கு தாங்க முடியாத வேதனையை உருவாக்கியுள்ளது." என்றார்.

இலவச மருத்துவம் தேவை என வலியுறுத்தப்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், பணத்தைப் பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் உரிய நேரத்தில் செய்து, உயிரையும், அதனை மீறிய வேதனையையும் காக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக்க உள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...