எப்படியாவது உடம்பை குறைச்சே ஆகணுமா?... அப்போ தினமும் காலையில சௌசௌ கஞ்சி குடிங்க...

சௌசௌ என்பது நமக்கு தெரிந்த ஒரு காயாகும். இதனை பெங்களூர் கத்திரிக்காய் என்றும் கூறுவர். ஒரு பக்கம் ஓவல் வடிவத்திலும் மறுபக்கம் உருண்டை வடிவத்திலும் இருக்கும்.

சௌசௌ என்பது நமக்கு தெரிந்த ஒரு காயாகும். இதனை பெங்களூர் கத்திரிக்காய் என்றும் கூறுவர். ஒரு பக்கம் ஓவல் வடிவத்திலும் மறுபக்கம் உருண்டை வடிவத்திலும் இருக்கும்.

இதன் தோல் பகுதி பச்சை நிறத்தில் இருக்கும். நல்ல அடர் பச்சை நிறத்தில் இதன் தோல் மாறும்போது இந்த காய் அறுவடைக்கு தயாராக இருக்கும் என்பது பொருள்.

சௌசௌ

மண்ணில் அதிக ஈரம் மற்றும் ஈரப்பதமான வெப்பநிலை இந்த காய் வளர்வதற்கு ஏற்ற நிலையாகும். பூ வந்தவுடன் அடுத்த 30 நாட்களில் இந்த காய் அறுவடைக்கு ஏற்ற நிலைக்கு வளர்ச்சியை எட்டுகிறது. ஒரே பருவத்தில் ஒரு செடி 150 காய்களை தருகிறது.

இதன் அறிவியல் பெயர் சிகியம் ஏட்யுள் ஆகும். ஒரு வகை சவ்ச்சவின் தண்டுகளைக் கூட உட்கொள்ள முடியும். இந்தோனேசிய உணவுகளில் இந்த சவ்ச்காவ் ஒரு பெரிய மூலப்பொருளாக பார்க்கப்படுவதன் காரணம் இதன் சுவை ஆகும். இந்த சவ்ச்சவ்வில் நீர்சத்து அதிகம் இருப்பதால் சமைத்தவுடன் மிகவும் மென்மையாக சுவையாக மாறுகிறது. இதன் தோல் பகுதி மற்றும் உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு இதனை சமைக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்

சௌசௌ சுவையை விட இதன் ஊட்டச்சத்துகள் மிகவும் அதிகம். இதில் உள்ள ஊட்டச்சத்து விபரம் பின்வருமாறு,

கலோரிகள்

சோடியம்

பொட்டாசியம்

கார்போஹைட்ரேட்

நார்ச்சத்து

க்ளுகோஸ்

புரதம்

கால்சியம்

இரும்பு

மக்னீசியம்

வைட்டமின் ஏ , பி 6 , சி, டி

நன்மைகள்

பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்ட சௌசௌ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் நபர், சௌசௌ கூழ் எடுத்துக் கொள்வதால் அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கொழுப்பை எரிக்க

சௌசௌ உள்ள ஊட்டச்சத்து கூறுகள், உடலில் உள்ள கொழுப்பை திறமையான முறையில் எரிக்க உதவுகிறது. வேக வைத்த சௌசௌ கஞ்சியை உங்கள் உணவில் சேர்த்து, அரிசியை தவிர்க்கலாம். உணவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. பொரித்த உணவால் கொழுப்பு அதிகரிக்கும். எடை குறைப்பிற்கு சௌசௌ சேர்த்துக் கொள்வதுடன் பயிற்சிகளும் மேற்கொள்வதால் எளிதில் பலன் கிடைக்கும்.

கொலஸ்ட்ரால்

உடலில் கொழுப்பு அளவு குறைவதுடன், சௌசௌ உட்கொள்வதால், உடலின் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது சௌசௌ உட்கொள்வதால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

செரிமான மண்டலம்

டயட் என்னும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, குடல் இயக்கத்தில் பாதிப்பு உண்டாகும் நிலை ஏற்படுகிறது. ஆனால் சௌசௌ எடுத்துக் கொள்வதால், இதில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்தின் காரணமாக உங்கள் செரிமான மண்டலம் மென்மையாக அதன் செயலை மேற்கொள்கிறது. உங்கள் செரிமான மண்டலம் சீராக இயங்க இந்த காய் மிகவும் அவசியம்.

நோயெதிர்ப்பு மண்டலம்

உடல் நலத்திற்கு பெரும் நன்மைகளைச் செய்யும் ஒரு காய் இந்த சௌசௌ. இதில் இருக்கும் வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக உணவு கட்டுப்பாட்டு நேரத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இதய ஆரோக்கியம்

 

தொடர்ந்து உடற் பயிற்சி செய்வதுடன் உங்கள் ஆரோக்கியமான உணவு பட்டியலுடன் இந்த சௌசௌவை இணைத்துக் கொள்வதால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.

மலச்சிக்கல்

உணவுக் கட்டுபாட்டில் இருக்கும் போது சில நேரம் எடுத்துக் கொள்ளும் சில வகை உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையை தடுக்க, உணவுக் கட்டுப்பாட்டின் ஆரம்பத்தில் சௌசௌ எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்படும்.

புற்றுநோயைத் தடுக்க

சௌசௌவில் உள்ள உயர் அண்டி ஆக்சிடென்ட் பண்பால், இது புற்றுநோயைத் தடுக்க முள் சீத்தாப்பழ இலைகளைப் போல் இவையும் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயை இந்த காய் பெரிதும் தடுக்கிறது.

உணவுக் கட்டுபாட்டை ஊக்குவிக்க

உணவுக் கட்டுபாட்டில் விரைந்து பயன் பெற நினைக்கிறவர்கள் தினமும் வேக வைத்த சௌசௌ எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.




வளர்சிதை மாற்றம்

உணவுக் கட்டுப்பாட்டின் போது, உடலின் வளர்சிதை மாற்றத்தையும் சீராக மற்றும் மென்மையாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்காக வேகவைத்த சௌசௌ எடுத்துக் கொள்வது ஒரு ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.

கூடுதல் ஊட்டச்சத்து

உணவுக் கட்டுபாட்டில் இருக்கும் நேரத்தில் ஒரு கூடுதல் ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்கும் ஒரு காய் இந்த சௌசௌ. இது ஹைபர் டென்ஷனை குறைக்கிறது. ஆரோக்கியமான உணவு பட்டியலில் இதனை தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.

உணவுக் கட்டுபாடு

உணவுக் கட்டுபாட்டில் இருக்கும் நேரத்தில், தினமும் காலை உணவிற்கு முன் இந்த காயை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் முழுவதும் உங்கள் டயட் சீராக இருக்க இந்த காய் உதவுகிறது.

நோ கலோரிகள்

உணவுக் கட்டுபாட்டில் இந்த காயை பயன்படுத்த முக்கிய காரணம், இதில் உள்ள குறைந்த கலோரி அளவு. 100 கிராம் சௌசௌவில் 16 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதிலும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு முற்றிலும் இல்லை. இதில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து, செரிமானத்தை சீராக்குகிறது.

அரிசிக்கு மாற்று

சௌசௌவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இதனை அரிசிக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம். காலை மற்றும் மாலை வேளையில் இதனை உட்கொள்ளலாம். இதில் இருக்கும் நீர்ச்சத்து, வயிற்றை நிரப்பும் உணர்வைத் தருகிறது. இதனால் பசி எடுக்காது. இதில் இருக்கும் மங்கனீஸ், கெட்ட கொழுப்பை எரித்து, கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையைக் குறைக்கிறது.

எப்படி பயன்படுத்துவது

சௌசௌவை சமைத்த பின் மட்டுமே உட்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இதனை சாலடில் பயன்படுத்துவார்கள். இந்தோனேசியாவில் இதனை ஒசெங் ஒசெங், வெஜிடபிள் அமிலம், மனடோ போரிட்ஜ் போன்ற பல்வேறு உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்துவார்கள். இதனை ஜூஸில் கூட சேர்த்து அருந்துவார்கள்.

இதனை சமைப்பதற்கு முன், இதன் தோலை நீக்கி விட வேண்டும். பிறகு சௌசௌ கழுவி சுத்தம் செய்து பின் பயன்படுத்த வேண்டும். சௌசௌவை இரண்டு பாதியாக நறுக்கி, ஒன்றோடு மற்றொன்றை தேய்ப்பதால் அதன் கொட்டை விலகி விடும். அதன் கொட்டையை முழுவதும் நீக்கிய பிறகு மறுமுறை கழுவிவிட்டு பின் சிறிய துண்டுகளாக நறுக்கவும். பின் அதை வேகவைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சீரகம், மிளகு தாளித்து கஞ்சி போல் செய்து குடிக்கலாம்.

டென்ஷன் குறைய

உணவுக் காட்டுப்பாடிற்கு மட்டும் இல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த காயை நீங்கள் பயன்படுத்தி பலன் அடையலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், ஹைப்பர் டென்ஷனைக் குறைக்கவும், இதய நோயைத் தடுக்கவும் சௌசௌ உதவுகிறது.

இதுவரை சௌசௌவை உங்கள் உணவில் இருந்து விலக்கி வைத்தவர்கள் இதன் நன்மையை அறிந்து உங்கள் உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...