உச்சி முதல் பாதம் வரை மொத்தமும் அழகாக சூப்பர் டிப்ஸ்!

ஒவ்வொருவருக்கும் தங்களை வெளியுலகத்திற்கு மனதளவிலும், உடலளவிலும் அழகாக வெளிப்படுத்திக்கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். உடல் அழகிற்கு முகத்தை மட்டுமே அழகு செய்து கொள்வது என்பது பொருந்தாது. 

உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு பாகத்தையும் அழகாக பார்த்துக்கொள்வது ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இந்த வகையில் உச்சி முதல் பாதம் வரை உங்களை அழகுபடுத்திக்கொள்ள சில சிம்பிளான டிப்ஸ் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

குளியலுக்கு...! 

தேங்காய் எண்ணெய்யில் மஞ்சள் தூளை கலந்து அதனுடன் பாசிப்பயறு மாவையும் கலந்து உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால், தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

இளமையாக இருக்க..! 



ஆரஞ்சிப்பழத்தை இரண்டாக வெட்டி அதனை முகத்தில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

முகத்தில் உள்ள முடிகளை போக்க..! 



முகத்தில் உள்ள முடிகளை போக்க எலுமிச்சை பழத்தை முகத்தில் போட்டு தினமும் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் முடி வளர்ச்சி குறைந்து, சருமம் வளவளப்பாக அழகாக காட்சியளிக்கும்.

டியில் உள்ள எண்ணெய் பசை நீங்க..! 



முடியில் உள்ள எண்ணெய் பசை நீங்க, முட்டையின் வெள்ளை கருவுடன் சர்க்கரை சேர்த்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் எண்ணெய் பசை நீங்கும்

டீ மாஸ்க் 



வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டிய தேயிலை பொடியை அரைத்து தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும்.

ஆப்பிள் மாஸ்க்! 



ஆப்பிள் பழத்தை நன்றாக அரைத்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகத்தில் உள்ள எண்ணெய் பசை மறைந்து சருமம் பருக்கள் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...