சீம்பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

பசு மாடுகளுக்கு இந்த பால் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் வரை மட்டுமே சுரக்கும், அதன்பின், பால் பழைய வெண்ணிறத்துக்கு மாறிவிடும், முதல் மூன்று நாட்கள் மட்டும் சுரக்கும் பாலையே, சீம்பால் என கிராமப்புறங்களில் குறிப்பிடுவர்.

சீம்பால் கன்றுக்கு அளிக்கும் நன்மைகள் 

சீம்பால் என்று குறிப்பிடப்படும் இந்த பால், கன்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும், அதற்கு சீரண சக்தியைத் தூண்டி, செரிமானத்தை உண்டாக்கும். 

இந்த பால், கன்றுகள் அவசியம் பருக வேண்டிய பால். மாடுகள் வீட்டில் வளர்ப்போரும், வணிக நோக்கில் பால் வியாபாரம் செய்வோரும், இந்த மூன்று நாட்களில் கன்றுகளுக்கு அந்தப் பாலை தடையின்றி கொடுப்பதற்காகத்தான், இயற்கையே அந்தப் பாலை தனித்தன்மை மிக்கதாக மாற்றியிருக்கிறது. 

மேலும், சாதாரண நேரங்களில் மாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலைவிட, இந்த பாலின் சக்தி பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை அதிகமிருக்கும். 

இந்த பால், காய்ச்சி பருகுவதற்கு, காபி அல்லது டீயில் கலப்பதற்கு ஏற்ற பால் இல்லை, இந்தப் பாலை காய்ச்சினாலே, பால் முறிந்துவிடும். எனவேதான், இதை கன்றுகளுக்கு கொடுத்து விடுவர். 

அதிக சத்து மிக்கதாக இருந்தாலும், இந்த சீம்பாலை வெளி ஆட்களுக்கு விற்பனை செய்ய மாட்டார்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவுக்குள் மட்டும் சீம்பாலை பருக உபயோகிப்பர். 

சில வீடுகளில் கன்றுகள் குடித்தது போக மீதமுள்ள பாலை, அவற்றின் இனிப்புச்சுவை காரணமாக, குழந்தைகள் விரும்பி பருகுவர். 

மேலும் சீம்பாலில் ஒரு சுவைமிக்க இனிப்பை தயார் செய்து அந்த வீட்டுக்குழந்தைகளுக்கு கொடுப்பர். குழந்தைகள் என்றில்லை, வீட்டில் உள்ள பெரிய குழந்தைகளும் ஆர்வமாக சாப்பிடும் ஒரு சுவைமிக்க இனிப்பும்கூட, இந்த சீம்பால்.

சுவையான சீம்பால் தயாரிக்கும் முறை : 

சீம்பாலின் மருத்துவ குணங்களால், அதை இனிப்பு தின்பண்டமாக தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கி குழந்தைகளின் உடல்நலத்தை வளமாக்குகின்றனர். 

சீம்பாலை ஒரு சட்டியில் வைத்து மிதமான சூட்டில் கிளறிவர, பால் முறிந்து திரி திரியாக வரும், இடைவிடாமல் கிண்டி, வெல்லம் அத்துடன் ஏலக்காய் சிறிது சுவைக்கேற்ப சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். வெல்லம் கரைந்து, சீம்பாலின் நீர்த்தன்மை குறையும் வேளையில் அடுப்பை அணைத்து விட்டு, சீம்பாலை எடுத்தால் சுவையும் நோய் எதிர்ப்பு சத்தும்மிக்க, சீம்பால் தயார்!

இந்த சீம்பாலையே சில இடங்களில், வெல்லம் கலந்து இட்லிப்பானைகளில் வேகவைத்தும் சாப்பிடுவர்.

சீம்பால் மனிதர்களுக்கு அளிக்கும் நன்மைகள் : 



சீம்பாலில் உள்ள அரிய புரதங்கள்,விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காரணமாக மனித உடலின் வயதாகும் தன்மை குறைந்து, உடலின் இளமைத்தன்மையை நீண்ட காலம் தக்க வைக்கிறது என்கின்றன மருத்துவ ஆய்வுகளின் அறிக்கைகள்.

மலச்சிக்கல் : 

சீம்பால் சிறந்த மலமிளக்கி, நாள்பட்ட மலச்சிக்கல்களை சரியாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி : 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கி, உண்ட உணவின் அஜீரணக் கோளாறுகளை நீக்கும் தன்மை மிக்கது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உடல் சக்தியை வலுவாக்கி, களைப்பின்றி, விரைவாக செயல்பட ஆற்றல் தரும்.




கடைகளில் விற்கப்படும் : 



இத்தனை அற்புத சுவையும் நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்ட சீம்பாலை நகரத்து மனிதர்கள் அறிந்திருக்க அல்லது சுவைத்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. இதன் பலன்களை கண்ட மேலை நாட்டினர் இதையும் வணிகப்படுத்திவிட்டனர், இவற்றை பல்வேறு அளவுகளில், பாக்கெட்களில் மற்றும் டப்பாக்களில் அடைத்து விற்கின்றனர். 

நம் கிராமங்களில் அல்லது சிறு நகரங்களில் வீடுகளில் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்வோர் கூட, இவற்றை விற்காமல், மாடு கன்று ஈன்ற தகவல் அறிந்து, சீம்பால் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கெல்லாம் இலவசமாகவே, இந்தப் பாலை அளிப்பர். 

ஆனால் இக்காலத்தில், எல்லாவற்றுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்து விட்டனர், எனவேதான், கன்றுகளின் உயிர்ப் பால், இப்போது கடைகளில் டின்களில் அடைத்த உணவாக! காற்றையே விற்கிறார்கள், சீம்பாலை விற்க மாட்டார்களா, என்ன!

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...