சர்க்கரை நோயினால் எலும்பு மூட்டு பாதிப்பு ஏற்படும்- மருத்துவர் ஆர்.விஜயராஜ் விளக்கம்

உலகிலேயே சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடு இந்தியா. இந்தியாவில் மட்டும் 60 மில்லியம் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2030 காலகட்டத்தில் இரண்டு மடங்காக அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. சர்க்கரை நோய் மனிதரின் வாழ்க்கையினையே மாற்றும் தன்மை உடையது. இது உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படக்கூடியது. உடற்பயிற்சி மற்றும் சிறந்த ஆரோக்கியமான உணவு மூலமாக சர்க்கரை நோயினை கட்டுப்படுத்த முடியும். மேலும், தொடர் சிகிச்சை, மருந்துகளின் மூலமாக சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தலாம்.

குறிப்பாக, சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மற்றும் மூட்டுப்பகுதிகளில் வலிகள், தேய்மானம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அவை, கை தோள்பட்டைப் பகுதி, கால் மூட்டுப் பகுதி, முதுகு தண்டுவடம், கை மணிக்கட்டுப் பகுதிகளில் வலிகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கை தோள்பட்டைப் பகுதி பாதிப்புகள்:-



கை தோள்பட்டைப் பகுதியில் வலி ஏற்படும். இது ஏற்பட்டால் கைகளை இயக்குவதில் சிரமம் ஏற்படும். 

இதன் அறிகுறிகள் என்ன ?

தோள்பட்டைப் பகுதி வலி வந்தால் கைகளை இயக்குவதில் சிரமம் ஏற்படும். கடினமான முயற்சிக்குப் பின்பே கைகளை இயக்க நேரிடும். இரவு நேரங்களில் அதிகப்படியான வலியினை உணர முடியும். 

இதற்கான சிகிச்சைகள் என்ன ?

இது ஆரம்பகாலத்திலேயே கண்டறியப்பட்டால் மருந்துகளின் மூலமாக குணப்படுத்த முடியும். அல்லது, பிசிக்கல் திரபி சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்த வாய்ப்புகள் உண்டு. உடற்பயிற்சி மூலமாகவும் இதற்கு தீர்வு காண முடியும். முற்றியநிலையில் கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவே சரிசெய்ய முடியும். 

கால் மூட்டுப் பகுதி பாதிப்புகள்:-



சர்க்கரை நோய் முற்றிய நிலையில் கால் மூட்டுப் பகுதி எலும்புகளில் உடைப்பு ஏற்பட்டு வலி உண்டாகும்.

அறிகுறிகள்:-

கால் மூட்டுப் பகுதியில் அதிகப்படியான வலி ஏற்படும். இயக்குவது கடினமாகும். கால்கள் இருக்கமான நிலையில் காணப்படும்.

இதற்கான சிகிச்சைகள் என்ன ?

உடல் எடையினை சீராக பராமறிக்க வேண்டும். உடற்பயிற்சி அவசியம். வலி ஏற்படும் மூட்டுப் பகுதிக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். அதிகப்படியான வலி ஏற்படும் பட்சத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வலி ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

முதுகு தண்டுவடப் பகுதி பாதிப்புகள்:-



உடல்நிலை தளர்வு மற்றும் எலும்பு முறிவினால் வலி ஏற்படும். சர்க்கரை நோயினால பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் அதிகப்படியாக தாக்கக் கூடும். 

அறிகுறிகள்:-

முதற்கட்டமாக தண்டுவடப் பகுதியில் வலி ஏற்படும். முற்றிய நிலையில் உடல் உயரம் குறைய வாய்ப்புள்ளது. எலும்புப் பகுதியில் தேய்மானம் அதிகரிக்கும்.

இதற்கான சிகிச்சைகள் என்ன ?

நடைபயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் உடல் எடை அதிகரிக்காதவாறு உணவு உட்கொள்ள வேண்டும். மேலும், கால்சியம் மற்றும் விட்டமின் டி அதிகமுள்ள உணவினை உட்கொள்தல் அவசியம். இந்த நோய் முற்றிய நிலையில், மருந்துகளை பயன்படுத்தலாம். இதன்மூலம் மேலும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதை குறைக்க முடியும். மேலும், மருந்துகளின் மூலம் எலும்புகளின் வலிமையும் அதிகரிக்கும்.

கை மணிக்கட்டுப் பகுதி பாதிப்புகள்:-



கை மணிக்கட்டுப் பகுதிகளில் உள்ள நரம்புகளிலேயே இந்த பாதிப்பு காணப்படும். அதாவது, கைப்பகுதியில் உள்ள நரம்பில் ஏற்படும் அழுத்தம் அல்லது நரம்பு சுறுக்கத்தினால் இது ஏற்படுகிறது.

அறிகுறிகள்:-

கைப்பகுதியில் வலி ஏற்படுவதைத் தவிர உணர்வின்மை, கூச்ச உணர்வும் ஏற்படும்.

இதற்கான சிகிச்சைகள் என்ன ?

ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை மேற்கொள்வது அவசியம். முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் இதனை சரிசெய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். முதற்கட்டத்திலேயே கைகளில் பேன்ட் அணிதல் மற்றும் சில வழிமுறைகளை பின்பற்றுவதால் குணமடைய வாய்ப்புள்ளது. மேற்கொண்டு, கைகளின் மூலமாக அதிகப்படியான பணிகளை செய்யும் போது பாதிக்கப்பட்டுள்ள நரம்பு மேற்கொண்டு பாதித்து மோசமான நிலமைக்கு எடுத்துச் செல்லும். அறுவை சிகிச்சையில் இருந்தும், நரம்பு முழுவதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கைகளில் அதிகப்படியான பழுதுகளை தூக்காமல் இருப்பது சிறந்தது.

இதுகுறித்து மேலும் தகவலுக்கு மருத்துவர் ஆர்.விஜயராஜ், ஆர்த்தோபெட்டிக்ஸ் நிபுணர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை, 0422-4500272, 9952601272 அல்லது [email protected]-யில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...