சீதாப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் கூட, 1980களில் நாடு எங்கும் நிறைந்திருந்தவை, சீதாப்பழ மரமும், கொடுக்காபுளி மரமும். காசு கொடுக்காமல் இலவசமாகவே, சாலையோர மரங்களில் கிடைக்கும் அந்த சுவை மிகுந்த பழங்களை, சிறுவர்கள் எல்லாம் தேடித்தேடி, சாப்பிடுவார்கள். சிறுவர்கள் செல்லும் வழிகளில், பார்க்குமிடங்கள் எல்லாம், அந்த மரங்களின் கனிகளை, காய்களைக் கவர்ந்து ஒளிந்து நின்று, ருசித்து ரசித்து சாப்பிடும் அவையெல்லாம், உடல் நலத்திற்கு மிகவும் நன்மை செய்பவை, என்பதை இன்று அறிய முடிகிறது.

அன்று? அதன் சுவைக்காக மட்டும் சிறுவர்களால், அதிகம் விரும்பிச் சாப்பிடப்பட்டது. மேலும் வசதியுள்ள சிறுவர்கள், வசதி இல்லாத சிறுவர்கள் என்ற பாகுபாடுகள் இல்லாமல், எல்லாச்சிறுவரும் விரும்பி உண்ட அவையெல்லாம், இன்று கடைகளில் அரிதாகக் கிடைக்கிறது.

பாக்கெட்களில் அடைத்து அதற்கு ஒரு விலையையும் இட்டு வைத்திருப்பது, பள்ளிப்பருவத்தில் ஓசியில் பறித்துத் தின்றவர்களுக்கு, புதிதாக இருந்தாலும் அவற்றை வாங்கி, வீட்டிற்கு வந்து தங்கள் பிள்ளைகளிடம் கொடுக்க, அவர்கள் மிக அலட்சியமாக அவற்றை மறுத்துவிட தலைமுறைகள் மாறிவிட்டது. இன்றைய சிறுவர்கள் அந்த அனுபவங்களைப் பெற முடியாமல் நவீன வாழ்க்கை நம்மை மாற்றிவிட்டது. நீங்கள் பள்ளிப்பருவ நாட்களை நினைத்துகொண்டு அந்தச்சுவை இப்போது இல்ல என நினைக்கும் போது நமக்கும் வயதாகிக்கொண்டிருக்கும் உண்மை, சுள்ளென உரைக்கிறது... நிற்க, இப்படியே போனால், இது தத்துவக்கட்டுரையாகிவிடும், நாம் இனி இந்த சீதாப்பழத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...