தினமும் ஊறுகாய் சாப்பிட்டால் உண்டாகும் பிரச்சனைகள் என்ன தெரியுமா?

சைட் டிஷாக என்ன இருந்தாலும் ஒரு ஸ்பூன் ஊறுகாய் தட்டில் இருக்கிறதா என்ற தேடல் பலருக்கும் இருக்கும். என்னென்னவோ சாப்பிடுகிறோம், இது சிறிய அளவு தானே இது சாப்பிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்பவரா அப்போ தொடர்ந்து படிங்க

செரிமானம் :

ஊறுகாய்களில் பெரும்பாலும் அமிலத்தன்மை கொண்ட காய்களையே பயன்படுத்துவோம். அதுவும் அது நீண்ட நாட்களில் கெடாமல் இருக்க ரசாயனங்கள்,உப்பு பயன்படுத்துவர். இது செரிமானக் கோளாறை ஏற்படுத்தும் அத்துடன் அடிவயிற்றில் வலி,வயிற்றுப்போக்கு ஏற்படவும் காரணமாகிவிடும்.

வயிற்றுப் புண் : 

ஊறுகாயில் உள்ள அதிக அமிலத்தன்மையால் வயிற்றுப் புண் ஏற்படவும் வாய்ப்புண்டு.

நோய் எதிர்ப்பு சக்தி : 

ஊறுகாயை தொடர்ந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திடும் இதனால் மற்றவர்களை விட எளிதாக தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.




மாரடைப்பு : 

ஊறுகாயில் சேர்க்கப்படும் அதிகப்படியான எண்ணெயால் அவை ரத்தத்தில் உள்ள ட்ரை க்ளிசரைடுகளின் அளவை அதிகரித்து மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.

சிறுநீரக கோளாறு : 

தொடர்ந்து ஊறுகாய் சாப்பிட்டால் அதை ஜீரணிக்க சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகமாக தேவைப்படும் அதனால் மெல்ல மெல்ல அதன் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும், சிறுநீரகக் கல், சிறுநீரகத் தொற்று போன்றவை ஏற்படும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...