பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு அழற்சி நோய்க்கான இயற்கை தீர்வுகள்

இடுப்பில் ஏற்படும் தொற்று என்பது தான் இடுப்பு அழற்சி நோய் என்று அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் pelvic inflammatory disease (PID) என்பர். இந்த நோயின் அறிகுறி இடுப்புப் பகுதியில் பெண்களுக்கு அதிகமான வலி ஏற்படும். இந்த நிலையானது இடுப்பில் உள்ள உறுப்புகளான கருப்பை, ஓவரிஸ், கருமுட்டை குழாய் மற்றும் பெரிடோனியம் போன்றவற்றில் ஏற்படும் தொற்றின் வெளிப்படாகும்.

இந்த உறுப்புகள் தான் வயிற்றுப் பகுதியை சுற்றி அமைந்துள்ளன. இந்த PID நோயில் ஒரு வகையான பாக்டீரியா, பெண்களின் வெஜினா அல்லது கருப்பை வாய் வழியாக பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சென்றடைகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணம் உடலுறுவின் மூலம் செல்லும்.

நோய்க் கிருமிகளான க்ளெமிடியா ட்ரோகோமடிஸ் மற்றும் கொனொரியா ஆகும்.

இந்த பாக்டீரியா உடலுறுவின் போது பெண்களின் வெஜினா வழியாக இனப்பெருக்க உறுப்புகளை சென்றடைந்து PID ஏற்பட வழி வகிக்கின்றன.

இந்த PID யை குணப்படுத்த ஒரு நல்ல வழி இயற்கை முறைகள் ஆகும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போறோம். இந்த PID நோயானது மேலும் பாலுறவு மூலம் (sexual intercourse) உருவாகும் வேறு நோய்க்கிருமிகளாலும் (SID pathogens) உருவாகுகிறது.

இந்த நோயானது ஆண்களை தாக்குவதில்லை. பெண்களின் இடுப்புப் பகுதியை தான் பாதிக்கிறது. சரி இப்பொழுது இதை எப்படி இயற்கை முறைகளை வைத்து சரி பண்ணலாம் என்று பார்ப்போம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுதல்:



ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய்க் கிருமிகள் தாக்கத்தில் இருந்து உங்கள் உடலை பாதுகாக்கலாம். நிறைய கால்சியம் நிறைந்த உணவுகள், கீரைகள், காலே, பீன்ஸ், பிரக்கோலி, பால் பொருட்கள் மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளான ப்ளு பெரிஸ், செர்ரி, தக்காளி, ஸ்குவாஷ், குடை மிளகாய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

தினமும் மல்டி விட்டமின்கள்:



தினமும் மல்டி விட்டமின்கள் அடங்கிய மாத்திரைகளை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின் ஏ, பி-காம்ப்ளக்ஸ், சி, ஈ போன்றவைகளும் மற்றும் தாதுக்களான மக்னீசியம், கால்சியம், ஜிங்க் மற்றும் செலீனியம் போன்றவைகளும் உள்ளன. இது PID யை சரிபண்ணுவதற்கான ஒரு நல்ல வழி முறையாகும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகள்:



ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சாப்பிட்டால் அழற்சியின் வீரியத்தை குறைக்கிறது. மீன் எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் 1-2 தினமும் சாப்பிடலாம் அல்லது ஒமேகா 3 அடங்கிய இயற்கை உணவுப் பொருட்களான ஆளி விதைகள், சியா விதைகள், சால்மன் மீன், வால்நட்ஸ், மாட்டிறைச்சி, டோஃபு, சர்டைன் மீன் போன்றவற்றை சாப்பிடலாம். மேலும் படிக்க...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...