அரசின் மானிய விலை இருசக்கர வாகனம் பெற ஜுலை 4 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை : அரசின் மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெறுவதற்கு ஜுலை 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை : அரசின் மானிய விலை இருசக்கர வாகனத்தைப் பெறுவதற்கு ஜுலை 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- 2018-19-ம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு இன்று முதல் ஜுலை 04-ம் வரை விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளது. அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் மானியம் ரூ. 25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். மாற்றுத்திறனாளி பயனாளிகள் எனில் ரூ. 31,250 வரை மானியம் வழங்கப்படும். கியர் இல்லாத 125சிசி திறனுக்கு மிகாத வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும். 

இந்த வாகனங்கள் உழைக்கும் மகளிருக்கு வழங்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த சுய தொழில் செய்யும் பெண்கள் இத்திட்டத்தின்கீழ் இருசக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம். 

இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை கடந்து திருமணமாகாத பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் மற்றும் தமிழகத்தில் உற்பத்தி செய்யும் டி.வி.எஸ். மற்றும் யமஹா நிறுவனங்களின் வாகனங்களை கொள்முதல் செய்ய விரும்புபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :  விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை ஜுலை 4 வரை சமர்ப்பிக்கலாம். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...