உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

கோவை : தமிழ்நாடு ஆசிரியர் தேரிவு வாரியம் மூலம் முதுகலை உதவியாளர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு-1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : தமிழ்நாடு ஆசிரியர் தேரிவு வாரியம் மூலம் முதுகலை உதவியாளர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு-1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இணையதளம் மூலம் இத்தேர்விற்கு வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 155-ம் தேதியாகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த இலவச பயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து வழிவகைகளும் செய்யப்படுகிறது. 

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள், அதற்கான ஆதாரம் மற்றும் புகைப்படத்துடன் விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24-ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முகநூல் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணில் (0422-2642388) தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...