பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தனி நபர் மற்றும் நிறுவனத்திற்கான விருதுகளை பெற 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை : ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா அன்று தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தனி நபர் மற்றும் சிறந்த சேவை புரிந்த நிறுவனம் ஆகிய 2 வகையான பிரிவிற்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை : ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா அன்று தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த தனி நபர் மற்றும் சிறந்த சேவை புரிந்த நிறுவனம் ஆகிய 2 வகையான பிரிவிற்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள் :

1. தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயத்திற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். 

2. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

3. சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். 

4. விண்ணப்பதாரரின் கருத்துரு-2 (தமிழ் 1 முதல் ஆங்கிலம் 1) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

மேற்படி விருதிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் உரிய ஆவணங்களுடன் 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...