கோவையில் ஆண்கள், பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ம் தேதி தொடக்கம்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 21-ம் தேதி ஆண்களுக்கும், 22-ம் தேதி பெண்களுக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 21-ம் தேதி ஆண்களுக்கும், 22-ம் தேதி பெண்களுக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்தத் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு, தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் டிப்ளமோ படித்தவர்கள் டிரைவர், பீட்டர், டர்னர், எலக்டீரிசியன், ஒயர்மேன், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர்கள் வரை என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களுக்கும் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 22-ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

மேற்கண்ட கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில், கலந்து கொள்ளும் மனுதாரர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணை அவ்வப்போதே வழங்கப்படும். இந்நிகழ்ச்சி மூலம் பணிநியமனம் பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது, என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...