பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்களை 18-ம் தேதி முதல் அளிக்கலாம்

கோவை : விவசாயிகள் பயன்பெறும் வகையிலான பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற 18-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : விவசாயிகள் பயன்பெறும் வகையிலான பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற 18-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி என்னும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது, இத்திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்பெற தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வருடந்தோறும் 3 தவணைகளில் ரூ. 6,000 நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் தகுதியுடையவர்கள் ஆவர். 

கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளின் குடும்பங்களை பயனாளிகளாக சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் தங்களின் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், பூமிக்குரிய பட்டா எண், குடும்ப அட்டை எண், மொபைல் எண் ஆகியவற்றை உடனடியாக தங்களது கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பதற்கு தகுதியான நாளான 01.02.2019-ம் தேதிக்குப் பிறகு நிலத்தின் உரிமையாளர் இறந்து, வாரிசு உரிமைப்படி நிலத்தின் உரிமை மாற்றப்பட்ட இனங்களுக்கும் இத்திட்டத்தின் கழ் பயன் அளிக்கப்படும். எனவே, நிலத்தின் உரிமையாளர் இறந்திருந்தால், அவரின் வாரிசுகள் உடனடியாக பட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பம் செய்து பயன்பெறும் 18-ம் தேதி முதல் நடைபெறும் ஜமாபந்தி முகாமிலும் மனு அளித்து பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. வன உரிமைச்சட்டத்தின் கீழ் பட்டா பெற்றவர்களும் மற்றும் குத்தகைதாரர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...