கோவை அரசு விடுதிகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை : கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கோவை : கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்காக 3 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்காக 3 விடுதிகளும், ஐ.டி.ஐ. மாணவர்களுக்காக ஒரு விடுதியும், பள்ளி மாணவர்களுக்காக 19 விடுதிகளும், பள்ளி மாணவியர்களுக்காக 7 விடுதிகளும் மற்றும் இருளர் மாணவியருக்கு ஒரு விடுதியும், இருளர் மாணவர்களுக்காக 2 விடுதிகளும் சேர்த்து மொத்தம் 39 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கு பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களும் சேர தகுதியுடையவர்களாவர். 

அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் இலவசமாக வழங்கப்படுகின்றன. விடுதிகளில் தங்கும் அனைவருக்கும் சீருடைகள், பாய் மற்றும் போர்வை போன்றவை இலவசமாக வழங்கப்படும். விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். 

2019-2020 கல்வி ஆண்டிற்கு விடுதிகளில் சேர விரும்பும் தகுதியுடைய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினி ஆகியோரிடமோ அல்லது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களைப் பூர்த்த செய்து அதனுடன் ஆதார் அட்டை நகல் மற்றும் மாணவ, மாணவியர்களின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினையும் இணைத்து அந்தந்த காப்பாளர்/ காப்பாளினி, வசம் பள்ளி அல்லது விடுதிக்கு 20-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...