சூலூரில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம் : அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை காலை நடைபெற உள்ள நிலையில், அத்தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை காலை நடைபெற உள்ள நிலையில், அத்தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-காலியாக உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. இதற்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, மின்வசதி, சாய்தள வசதி என அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்காளர்கள் பூத் ஸ்லிப்பை வைத்து, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டை உள்பட 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

மேலும், இடைத்தேர்தலை முன்னிட்டு சூலூர் தொகுதிக்குட்பட்ட அரசு மற்று தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சூலூர் இடைத்தேர்தலலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கையின் நடுவிரலில் மை வைக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...