சொத்துவரி பொதுச்சீராய்வு ஏதும் அமல்படுத்தப்படவில்லை : பத்திரிக்கை செய்திக்கு கோவை மாநகராட்சி மறுப்பு

கோவை : சொத்துவரி சீராய்வு தொடர்பாக தற்போது சில நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளுக்கு கோவை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவை : சொத்துவரி சீராய்வு தொடர்பாக தற்போது சில நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளுக்கு கோவை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சியில் சொத்துவரி சீராய்வு தொடர்பாக தற்போது சில நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது தெரியவருகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தரப்பிலிருந்து சொத்துவரி சீராய்வு தொடர்பாக நாளிதழ்களுக்கோ, ஊடகங்களுக்கோ எந்தவித செய்தியோ, அறிவிப்போ வழங்கப்படவில்லை.கோவை மாநகராட்சியில் புதிய இணையவழி மென்பொருள் முறையினை அமல்படுத்துவது குறித்து, பரிச்சார்த்த முறையில் பரிசோதனை செய்யப்பட்டது. தவிர, தற்போது நாளிதழ்களில் குறிப்பிட்டுள்ளதை போல கோவை மாநகராட்சியில் சொத்துவரி பொதுச்சீராய்வு ஏதும் அமல்படுத்தப்படவில்லை, என மாநகராட்சி நிர்வாகத்தால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...