கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்க மே 31-ம் தேதி கடைசிநாள்

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் வரும் மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் வரும் மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஆண்கள்), அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பெண்கள்) மற்றும் ஆனைகட்டியில் உள்ள அரசினர் தொழில்பயிற்சி நிலையங்களுக்கு நடப்பு கல்வியாண்டு பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த 3-ம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

எலக்ட்டிரிசன், எம்.எம்.வி. ஃபில்ட்டர், டர்னர், மெஷினிஸ்ட், மெஷினிஸ்ட் கிரைண்டர், ஆர் அன்ட் ஏ.சி, கோபா, வயர்மேன், வெல்டர், ஐ.சி.டி.எஸ்.எம்., ஐ.எம்., எம்.எம்.டி.எம்., சி.à®·.இ., ஷீட் மெட்டல் வொர்க்கர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை இரு பாலாருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விபரங்களை பூர்த்தி செய்து வரும் 31-ம் தேதிக்குள் நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும், பயிற்சியாளர்களுக்கான பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் பிரதி மாதமும் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி இலவசமாக வழங்கப்படும். தொழிற்பிரிவுகளைப் பொறுத்து பயிற்சியாளர்கள் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு இலவச உணவு வசதியுடன் தங்கும் விடுதி வழங்கப்படும். வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை (பெண்களுக்கு உச்சவரம்பு இல்லை).

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் கேம்பஸ் இன்டர்வ்யூ மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...