மே 7-ம் தேதி இயக்கப்படும் கோவை - திருச்சி வாராந்திர சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்

கோவை : மே 4 மற்றும் 7-ம் தேதிகளில் இயக்கப்படும் கோவை - திருச்சி வாராந்திர எக்ஸ்பிரஸ், திருச்சி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ரயில் எண். 06025 கோவை - திருச்சி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் இருந்து 7-ம் தேதி இரவு 09.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். ஆனால், இந்த ரயில் கோவை - சென்னை எழும்பூர் வரை மட்டும் இயக்கப்படும். சென்னை எழும்பூர் - திருச்சி வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல, ரயில் எண். 06026 திருச்சி - எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் இருந்து நாளை பிற்பகல், 2.20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர் முதல் எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. திருச்சி - சென்னை எழும்பூர் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...