மே தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகளை மூட உத்தரவு

கோவை : மே தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மதுபானக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : à®®à¯‡ தினத்தை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மதுபானக் கடைகளை மூட அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல் எஃப்.எல்.3ஏ மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகிய உரிமத்தலங்களின் மதுக்கூடங்களை மே 1-ம் தேதி மே தினத்தை முன்னிட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இதேபோல, நீலகிரி மாவட்டத்திலும், மதுபானக் கடைகள், கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்களை மே 1-ம் தேதி மூட வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆணை பிறப்பித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...