ஏப்.,18-ம் தேதி விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

கோவை : நாடாளுமன்ற தேர்தல் நாளான வரும் 18-ம் தேதி வாக்களிக்க வசதியாக, ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை : à®¨à®¾à®Ÿà®¾à®³à¯à®®à®©à¯à®± தேர்தல் நாளான வரும் 18-ம் தேதி வாக்களிக்க வசதியாக, ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 18-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டுள்ளன. 

இந்தத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவாக வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், தேர்தல் நாளான வரும் 18-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விடுமுறை வழங்காத நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. à®¤à¯Šà®´à®¿à®²à®¾à®³à®°à¯à®•ள் 044-24321438 மற்றும் 9600-198-875 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு 18-ம் தேதி, ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகள் கடைசியாக பணிபுரிந்த நாளன்று பெற்ற ஊதியத்தினை பொதுவிடுமுறை நாளான 18-ம் தேதி வழங்கிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...