ஓட்டுக்கு காசு கொடுத்தா... பொதுமக்கள் போட்டுக்கொடுக்கணும்...

வரும் நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல் கட்சியினரை சட்டரீதியாக தண்டிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பை தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.


வரும் நாடாளுமன்றத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல் கட்சியினரை சட்டரீதியாக தண்டிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பை தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களை பொதுமக்கள் நேரடியாகவே தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்கான பிரத்யேக தொலைபேசி எண்களும், C-Vigil எனும் செல்போன் செயலியும் தேர்தல் ஆணையம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

வாக்காளர்களுக்கு பணம், மது பாட்டில்கள் அல்லது பொருட்கள் ஆகியவற்றை அரசியல் கட்சியினர் வழங்கும்பட்சத்தில் பொதுமக்கள் தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ, செல்போன் செயலியில் உரிய ஆவனங்களுடன் புகார் அளிக்கலாம்.

பெறப்படும் புகார்களின் அடிப்படையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட பணம், மது பாட்டில்கள், துப்பாக்கி, பட்டு சேலைகள், தங்க நகை என மொத்தம் 158 வழக்குகள் பதிவாகிவுள்ளன. இவற்றில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகாரின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டவையும் உள்ளது.

நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 புகார்கள் மாவட்ட தேர்தல் கண்காணிப்பு பிரிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் முறைகேடுகளை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு பிரிவின் தொலைபேசி எண்களான:- 0422 - 2201903, 2201904, 2201905, 2201906, 2201907 அல்லது 1800 425 4757 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...