சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

கோவை : அரக்கோணம் - தக்கோலம் இடையிலான பொறியியல் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.


கோவை : அரக்கோணம் - தக்கோலம் இடையிலான பொறியியல் பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, ஏப்., 14-ம் தேதி காலை 07.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் எண் : 12243 சென்னை சென்ட்ரல் - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும், அன்றைய தினமே பிற்பகல் 03.05 மணிக்கு கோவையில் இருந்து கிளம்பும் ரயில் எண் : 12244 கோவை - சென்னை சென்ட்ரல் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

மாற்றம் செய்யப்பட்ட ரயில் விபரம் :

சென்னையில் இருந்து 14-ம் தேதி இரவு 11 மணிக்கு கிளம்ப வேண்டிய ரயில் எண் : 22153 சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ், 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...