கோவை - ஈரோடு இடையிலான எம்.இ.எம்.யூ. சிறப்பு பயணிகள் ரயிலின் நேரம் மீண்டும் மாற்றம்

கோவை : கோவை - ஈரோடு இடையே இயக்கப்பட்டு வரும் எம்.இ.எம்.யூ. சிறப்பு பயணிகள் ரயிலின் நேரம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவை - ஈரோடு இடையே இயக்கப்பட்டு வரும் எம்.இ.எம்.யூ. சிறப்பு பயணிகள் ரயிலின் நேரம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் எண் : 66608/66609 எம்.இ.எம்.யூ. சிறப்பு பயணிகள் ரயில் வியாழக்கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் கோவை - ஈரோடு இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ரயில் மீண்டும் பழைய நேர அட்டவணைப்படியே இயக்கப்படுகிறது. 

அதாவது, வரும் 10-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை (வியாழக்கிழமை தவிர்த்து) காலை 8 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து, தொட்டிப்பாளையம், பெருந்துறை, இங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர், வஞ்சிப்பாளையம், சோமனூர், சூலூர் ரோடு, இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு, கோவை வடக்கு ஆகிய நிறுத்தங்களைக் கடந்து மாலை 04.10 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடைகிறது, இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...