வரியினங்களை செலுத்துவதற்காக வரும் 31-ம் தேதி வரை மாநகராட்சி வரிவசூல் மையங்கள் செயல்படும்

கோவை : சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்துவதற்கு ஏதுவாக, மாநகராட்சி வரிவசூல் மையங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோவை : சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்துவதற்கு ஏதுவாக, மாநகராட்சி வரிவசூல் மையங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சிக்கு 2018-2019-ன் இரண்டாம் அரையாண்டு வரையிலான செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக, மாநகராட்சி வரிவசூல் மையங்கள் வரும் 31-ம் தேதி வரை அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் இதர வரிவசூல் மையங்கள் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன. மேலும், ccmc.gov.in என்ற இணையதள முகவரியிலும் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவைகளை செலுத்தலாம்.

மேலும், நடப்பு மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 31-ம் தேதியிலும் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல் செயல்படும்.

எனவே, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் சொத்துவரி, மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிகவளாக உரிமையாளர்கள் இந்த வசதியினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறும், மேலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய காலியிடவரி, தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி நிலுவைத் தொகைகளை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...