சென்னை - எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயில் அறிமுகம்

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை - எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயிலை சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.


போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை - எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயிலை சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 

ரயில் எண் : .06039 சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு கட்டண சிறப்பு ரயில், வரும் 29-ம் தேதி சென்னையில் இருந்து இரவு 08.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடைகிறது. இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டபாலம், திருசூர் மற்றும் அலுவா உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும். 

மேலும், பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை மார்க்கமாக இயக்கப்படும் கோவை - நிஜாமுதின் கொங்கு எக்ஸ்பிரஸ், லோக்மன்யா திலக் டெர்மினஸ் - கோவை குர்லா எக்ஸ்பிரஸ், ராஜ்கோட் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்த விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.

https://simplicity.in/govt-notification-detail.php?gid=916&isnotify=n

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...