ஜுன் மாதத்தில் கோவையில் இருந்து திருச்சிக்கு கோடை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவையில் இருந்து திருச்சிக்கும், சென்னையில் இருந்தும் கோவைக்கும் என பல்வேறு கோடை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவையில் இருந்து திருச்சிக்கும், சென்னையில் இருந்தும் கோவைக்கும் என பல்வேறு கோடை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் : 06064, நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில், வரும் ஜுன் மாதம் 9, 16, 23 மற்றும் 30 ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. 

ரயில் எண் : 06037, சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில், வரும் ஜுன் 07, 14, 21 மற்றும் 28-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 08.10 மணிக்கு கிளம்புகிறது. மறுநாள் காலை 08.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

ரயில் எண் : 06038, எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண ரயில், வரும் 06, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து இரவு 07.40 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 09.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

ரயில் எண் : 06059, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு கட்டண ரயில், வரும் ஜுன் 06, 13, 20 மற்றும் 27-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 7 மணிக்கு கிளம்புகிறது. மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

ரயில் எண் : 06060, திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண ரயில், வரும் ஜுன் 05, 12, 19 மற்றும் 26-ம் தேதிகளில் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 03.45 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 09.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

 

ரயில் எண் : 06026, திருச்சி - எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில், வரும் ஜுன் 01, 08, 15, 22 மற்றும் 29-ம் தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 02.20 மணிக்கு கிளம்புகிறது. மறுநாள் காலை 08.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

ரயில் எண் : 06033, சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு கட்டண ரயில், வரும் ஜுன் 03, 10, 17 மற்றும் 24-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 08.45 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 04.15 மணிக்கு கோவை வந்தடைகிறது. 

ரயில் எண் : 06034, எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண ரயில், வரும் ஜுன் 02, 09, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 07.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

ரயில் எண் : 06025, கோவை - திருச்சி சிறப்பு கட்டண ரயில், வரும் ஜுன் 04, 11, 18, 25 மற்றும் ஜுலை 2-ம் தேதிகளில் கோவையில் இருந்து மதியம் 09.15 மணிக்கு கிளம்புகிறது. மறுநாள் காலை 1.15 மணிக்கு திருச்சி சென்றடையும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதேபோல, ஈரோடு - கரூருக்கு இடைப்பட்ட பகுதியில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், ஏப்ரல் 22, 26 மற்றும் 29-ம் தேதிகளில் இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விபரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள் 

https://simplicity.in/govt-notification-detail.php?gid=911&isnotify=n

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...