கோவையில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 24-ம் தேதி பயிற்சி

கோவை : வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களுக்கு வரும் 24-ம் தேதி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கோவை : வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களுக்கு வரும் 24-ம் தேதி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு நியமன உத்தரவு நேரிடையாக துறை தலைமை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சி தொடர்பான குறுஞ்செய்தி, வாக்குச்சாவடி அலுவலர்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும்.

10 மக்களவை தொகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் இடங்கள் தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு :-

மேட்டுப்பாளையம் தொகுதி - நேசனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகை சாலை, மேட்டுப்பாளையம்.

சூலூர் - ஆர்.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சூலூர்.

கவுண்டம்பாளையம் - கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜி.என்.மில்ஸ்.

கோவை (வடக்கு) - இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவ இந்தியா

தொண்டாமுத்தூர் - ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், டெக்னாலஜி, குனியமுத்தூர்

கோவை (தெற்கு) - நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காமராஜ் சாலை, ரெட்பீல்ட்ஸ்.

சிங்காநல்லூர் - மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம். 

கிணத்துக்கடவு - இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி பிரதான சாலை, ஒத்தக்கால் மண்டபம்.

பொள்ளாச்சி - மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி, நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு ஆடிட்டோரியம், பொள்ளாச்சி

வால்பாறை - மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி, நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு ஆடிட்டோரியம், பொள்ளாச்சி

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...