கோவை, பொள்ளாச்சி தொகுதிகளுக்கு இலவச தேர்தல் புகார் எண்கள் அறிவிப்பு

கோவை : மக்களை தேர்தலுக்கான கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் சட்டவிரோதமாக நடக்கும் பணப் பட்டுவாடா குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணிநேரம் செயல்படும் இலவச புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை : மக்களை தேர்தலுக்கான கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் சட்டவிரோதமாக நடக்கும் பணப் பட்டுவாடா குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணிநேரம் செயல்படும் இலவச புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலை முன்னிட்டு  அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநர் அலுவலகத்தின் சார்பாக 24 மணிநேரம் செயல்பாட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் நோக்கத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் பெருமளவிலான தொகையினை பதுக்கி வைத்தல், பணம் வழங்குதல் உள்ளிட்ட புகார்களை இந்த இலவச புகார் எண்களை தொடர்பு கொள்ளலாம்  

தொலைபேசி எண் : ‪18004256669‬, ஃபேக்ஸ் எண் : ‪044-28262357‬, மின்னஞ்சல் முகவரி :- [email protected] மற்றும்

‪9445467707 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...