வரும் 10-ம் தேதி கோவை மாநகராட்சி சார்பில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்

கோவை : கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது

கோவை : à®•ோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது 

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இந்த முகாம்கள் வரும் 10-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்காக அனைத்து மாநகராட்சி நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில், மாநகராட்சி பிரதான அலுவலகம், ரயில் நிலையம், 5 பேருந்து நிலையங்கள் மற்றும் 5 நடமாடும் ஊர்திகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வழங்கப்படவுள்ள போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது என பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

எனவே, கோவை மாநகரில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், எந்தவிதமான நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அதனைக் கருத்தில் கொள்ளாமல், தவறாமல் அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி, நமது மாநகராட்சிப் பகுதியிலிருந்து போலியோ நோயினை அறவே ஒழித்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும், இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...