சென்னை - எர்ணாகுளம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் : முன்பதிவு தொடக்கம்

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம், திருவனந்தபுரம், தூத்துக்குடி உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம், திருவனந்தபுரம், தூத்துக்குடி உள்பட பல்வேறு நகரங்களுக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண். 82631 : சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சந்திப்பு வரையில் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது, ஏப்., 05, 12, 19, 26 மற்றும் மே 03, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 08.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 08 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பு சென்றடைகிறது. 

ரயில் எண் : 82635 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் வரையில் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 18-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு இயக்கப்படும் இந்த ரயில், மறுநாள் நண்பகல் 11.45 மணிக்கு சென்றடைகிறது.

ரயில் எண் : 82605 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி சுவிதா சிறப்பு ரயில், மே 6-ம் தேதி சென்னை எழும்பூர் நிறுத்தத்தில் இருந்து 06.50 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 07.10 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்தடைகிறது. 

ரயில் எண் : 82603 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில், ஏப்., 05, 12, 26 மற்றும் மே 03, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை 06.50 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 06 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. ரயில் எண் : 82604 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சுவிதா சிறப்பு ரயில், திருநெல்வேலியில் இருந்து ஏப்., 07, 14, 21, 28 மற்றும் மே 05, 12, 16, 19 மற்றும் 26, ஜுன் 2-ம் தேதிகளில் 06.15 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 05.35 மணிக்கு எழும்பூர் ரயில் நிறுத்தம் சென்றடைகிறது. 

ரயில் எண் : 82634 எர்ணாகுளம் சந்திப்பு - சென்னை சென்ட்ரல் வரையில் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது, ஏப்., 07, 14, 21, 28 மற்றும் மே 05, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 07.20 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 08 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பு சென்றடைகிறது. 

ரயில் எண் : 82633 திருச்சி - எர்ணாகுளம் சந்திப்பு சுவிதா சிறப்பு ரயில், ஏப்ரல் 13-ம் தேதி திருச்சியில் இருந்து பிற்பகல் 02.20 மணிக்கு கிளம்புகிறது. மறுநாள் எர்ணாகுளத்திற்கு 08,45 மணிக்கு சென்றடைகிறது. 

ரயில் எண் : 82633 புதுச்சேரி - சந்திரகாச்சி சுவிதா சிறப்பு ரயில், ஏப்ரல் 06 மற்றும் 13-ம் தேதிகளில் மாலை 06.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படுகிறது. மறுநாள் சந்திரகாச்சிக்கு அதிகாலை 04.30 மணியளவில் சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...