கோடையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் : இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

கோவை : கோடைக்காலத்தில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகாமல், வசதியாகப் பயணிக்கத் தெற்கு ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.

கோவை : கோடைக்காலத்தில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகாமல், வசதியாகப் பயணிக்கத் தெற்கு ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது. 

அதன்படி, இன்று காலை முதலாகவே சிறப்பு ரயில்களில் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. 

எர்ணாகுளம் ஜங்சன் - ஹைதராபாத் சிறப்பு ரயில் : 

எர்ணாகுளம் ஜங்சன் - ஹைதராபாத் சிறப்பு ரயில் வரும் (07118) வரும் மே மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து ஹைதராபாத் புறப்படுகிறது. இந்த ரயில் எர்ணாகுளத்திலிருந்து இரவு 9.30 மணியளவில் புறப்பட்டு மறுநாள் இரவு 10.55க்கு சென்றடைகிறது. 

இந்த ரயிலானது ஆலுவா, திரிசூர், ஒத்தபாலம், பால்கோட், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, குடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், பிடிகுருலா, நல்கொண்டா, செகந்தராபாத் ஆகிய வழித்தடங்களில் நின்று செல்கிறது. 

கொச்சுவேலி- ஹைதராபாத் சிறப்பு ரயில் : 

கொச்சுவேலி - ஹைதராபாத் சிறப்பு ரயில் (07116) வரும் மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகள் மற்றும் ஜூன் 3, 10, 17, 24 மேலும், ஜூலை 1ம் தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து ஹைதராபாத் புறப்படுகிறது. இந்த ரயில் கொச்சுவேலியில் இருந்து காலை 7. 45 மணியளவில் புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணியளவில் ஹைதராபாத்தைச் சென்றடைகிறது. 

இந்த ரயிலானது கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், திருவல்லா, எர்ணாகுளம், ஆலுவா, திரிசூர், ஒத்தபாலம், பால்கோட், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, குடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், பிடிகுருலா, நல்கொண்டா, செகந்தராபாத் போன்ற நிறுத்தங்களைக் கடந்து செல்கிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...