கோவை - பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

கோவை : பொறியியல் பணி காரணமாக, கோவை - பாலக்காடு பயணிகள் ரயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கோவை : பொறியியல் பணி காரணமாக, கோவை - பாலக்காடு பயணிகள் ரயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

சூலூர் மற்றும் சோமனூர் வழித்தடத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, 66607 என்ற எண் கொண்ட ரயிலின் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவை - பாலக்காடு இடையில் இயங்கும் பயணிகள் ரயிலானது, ஞாயிறு தவிர்த்த பிற நாட்களில், மாலை 6.35 மணியளவில் புறப்படும். இந்த நேர மாற்றம், பிப்.,28ம் தேதி தொடங்கி வரும் மார்ச் மாதம் 15ம் தேதி வரை இருக்கும். 

முன்னதாக, இந்த ரயில் சேவையானது, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மாலை 7.10 மணிக்கும், திங்கள், வியாழன்,வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் மாலை 7.30 மணிக்கும் என இயங்கிக் கொண்டிருந்தது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...