டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 1-ல் விண்ணப்பித்தவர்களுக்கு 27 மற்றும் 28-ம் தேதிகளில் மாதிரி தேர்வு

கோவை : தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 1-ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 27 மற்றும் 29-ம் தேதிகளில் மாதிரி தேர்வு நடைபெறுகிறது.

கோவை : à®¤à®®à®¿à®´à®• அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 1-ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 27 மற்றும் 29-ம் தேதிகளில் மாதிரி தேர்வு நடைபெறுகிறது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் :- தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 1-ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி) ஆகிய 139 பணிக் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 

இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயற்சி அளிக்கப்பட்டது. 

மேலும், இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதிரி தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதிரி தேர்வில், இத்தேர்வில் விண்ணப்பித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத மனுதாரர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரம் மற்றும் புகைப்படத்தை எடுத்து வந்து தேர்வில் பங்கேற்கலாம். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...