கோவை மின் வாரியத்தில் ஐ.டி.ஐ. தொழிற்பழகுநர் பயிற்சிக்கு நேர்காணல்

கோவை : கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்தில் ஐ.டி.ஐ கல்வி பயின்றவர்களுக்கான தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் இன்று தொடங்கியது.

கோவை : கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்தில் ஐ.டி.ஐ கல்வி பயின்றவர்களுக்கான தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் இன்று தொடங்கியது.

கோவை டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள மின்பகிர்மான வடக்கு மேற்பார்வை அலுவலகத்தில் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நேர்காணல், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்திற்குட்பட்ட அலுவலகங்களில் 2018-2019-ம் ஆண்டிற்கான ஒருவருட கால ஐ.டி.ஐ. தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 49 வயர்மேன் மற்றும் எலக்ட்ரீஷியன்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ. 7,500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்த நேர்காணல் நடத்துவதற்காக கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட திறன்மேம்பாட்டு மையம் ஆகிய அலுவலகத்திலிருந்து 290 ஐ.டி.ஐ கல்வி பெயர் பட்டியல் பெறப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இன்று 150 பேர் நேர்காணலில் கலந்து கொள்ள உள்ளனர்.

நேர்காணலில் கலந்து கொள்ள வருபவர்கள் கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அட்டை கொண்டுவர வேண்டும். அதே சமயம், ஏற்கனவே இந்தப் பயிற்சி பெற்றவர்கள் மீண்டும் இந்த நேர்காணலுக்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...