கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் வரும் ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.


கோவை : கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் வரும் ஞாயிறு மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.



இது குறித்து மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்க வரும் 23ம் தேதி மற்றும் 24ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. ஆகவே, பொதுமக்கள் அவரவர் வசிப்பிடத்தின் அருகிலுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று வாக்குச்சாவடி மைய அலுவலரிடமிருந்து பெயர் சேர்ப்புக்கான படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளைத் திருத்தம், நீக்கம் செய்யவும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...