கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவை இன்று தொடக்கம்

கோவை : கோவை - மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமை பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்கியது.


கோவை : கோவை - மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமை பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்கியது.

கோவை : கோவை- மேட்டுப்பாளையம் இடையே பாசஞ்சர் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமையும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று அந்த சேவை தொடங்கப்பட்டது.

இந்த பாசஞ்சர் ரயில் சேவை கடந்த 6 ஆண்டுகளாக வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கிவந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் மற்றும் இயக்கப்படாமல் இருந்தது. தினமும் காலை 8.15 மணிக்கு பயணத்தை தொடங்கும், கோவையில் இருந்து 4 முறை இயக்கப்பட்டு வருகிறது. வடகோவை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமையும் இந்த ரயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து தென்னக ரயில்வே நிர்வாகம் பயணிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரயிலை இயக்க முடிவு செய்தது.

காலை 9.30 மணிக்கு கோவையிலிருந்து- மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்ட இந்த ரயில் சேவையை கோவை எம்.பி நாகராஜன் தொடங்கிவைத்தார். பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ரயில் இயக்கப்பட்டதால் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.



Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...