கோவையில் வரும் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் இந்த முகாமில், படிக்காதவர்கள் முதல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், முதுகலை படித்தவர்கள், ஐ.டி.ஐ. படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள், ஓட்டுநர்கள், பிட்டர், டர்னர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர் வரை என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களுக்கும் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு பெறுபவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வாங்கப்படமாட்டாது. மேலும், வேலைபெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...